lovers day against incident in theni district vaigai dam 

Advertisment

நேற்று (14.02.2023) உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்வேறு இந்துஅமைப்புகள்எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஜோடியாக வந்திருந்தனர். காதலர் தினக்கொண்டாட்டத்தை எதிர்க்கும் விதமாக, இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார் தலைமையில், கையில்மாலைகள் மற்றும் மாங்கல்யத்துடன் அங்கு வந்த சிலர், காதல் ஜோடிகளைத்தேடினர். ஆனால் அங்கிருந்த காதல் ஜோடிகள் இவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீசார் இந்தசம்பவத்தைக் கண்டவுடன்காதல் ஜோடிகளை வைகை அணைக்கு விடாமல்திருப்பி அனுப்பினர். இதனால் காதலர் தினத்தைக் கொண்டாட வந்த காதலர்கள் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்து இளைஞர் முன்னணிஅமைப்பின் இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.