Advertisment

காதலனுடன் வீட்டிற்குள் சென்ற இளம்பெண்; தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

lover Incident at krishnagiri

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள கெளதாலம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (22). இவர் பச்சப்பனட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி யுவஸ்ரீ (17) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நரசிம்மமூர்த்தி தனது மகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக யுவஸ்ரீயின் தாயார் தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், நரசிம்மமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நரசிம்ம மூர்த்தியை பார்ப்பதற்காக யுவஸ்ரீ, தனது காதலனின் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டுக்குள் சென்ற அவர்கள், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த நரசிம்மமூர்த்தியின் தாயார் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால், ஜன்னலை திறந்து பார்த்த போது, அங்கு நரசிம்மமூர்த்தியும், யுவஸ்ரீயும் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சென்ற காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident Krishnagiri
இதையும் படியுங்கள்
Subscribe