lover couple incident police investigation in salem district

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் காதல் திருமணம் செய்த நபரைத் தாக்கி அவரது மனைவியைக் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்- சுஜிதா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பின்னர், இரு தரப்பு பெற்றோரையும் அழைத்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதையடுத்து, வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போது, திடீரென பெண் வீட்டார் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராசிபுரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர். ஆனால், தங்களது காவல் எல்லை பகுதிக்கு வராது எனக் கூறி காதல் ஜோடியை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்று காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த அவர்களை, பெண் வீட்டார் கடுமையாகத் தாக்கி பெண்ணை கடத்திச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதில் காயமடைந்த அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் பாதுகாப்பு தரவில்லை என்பதாலேயே தனது மனைவியைக் கடத்திச் சென்றதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.