Advertisment

காதலியின் கழுத்தில் கத்தி குத்து: காதலன் கைது: சென்னையில் மீண்டும் பரபரப்பு

 lover arrested

Advertisment

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் காதலியின் பின்பக்க கழுத்தில் காதலன் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் (வயது-28). இவரின் காதலி இந்து (வயது-26). சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும்போது காதல் ஏற்பட்ட நிலையில் அந்த பெண் மீது சந்தேகம் அடைந்தார். அவரை பல்லாவரம் வரவழைத்த நிலையில், செல்போனை பிடிங்கி பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் சாலையிலேயே சண்டை ஏற்பட்டது. இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். திடீரென இந்துவின் பின்பக்க கழுத்தில் சின்ன கத்தியால் குத்தியுள்ளார்.

இதனையடுத்து இந்துவை மீட்ட அங்குள்ளவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்திய பிரகாஷை பல்லாவரம் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

காதல் விவகாரத்தால் மதுரவாயிலை சேர்ந்த அஸ்வினி என்ற கல்லூரி மாணவியை கடந்த சில வாரங்களுக்கு முன் காதலன் அழகேசன் என்பவன் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த விவகாரம் அடங்கி சிலநாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

lover arrested
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe