காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!

Love married couple asked for protection of Shelter in the  Sp office

ஈரோடு மாவட்டம் லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (27). இவர் ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்தவர் இந்துமதி(26). சட்டம் படித்து முடித்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பழகியுள்ளனர். கடந்த இரண்டரை வருடமாக சஞ்சையும், இந்துமதியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்துமதி வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் காதலில் உறுதியாக இருந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி காதல் ஜோடி இருவரும் வெளியேறி இன்று சோலாரில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் குமரகுபரன் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து காதல் ஜோடி இருவரும் மணக் கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதனை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி அங்கு விசாரிக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Erode lovers police
இதையும் படியுங்கள்
Subscribe