Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு - எம்ஜிஆர் மீது வழக்குப்பதிவு!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Love marriage sons father got injured

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரி என்பவரின் மகன் மணிகண்டன். இவரும், வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்துவந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், தங்கள் வீடுகளில் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என எண்ணிய அவர்கள் கடந்த 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 

 

இதனால், அவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, ஆறுமுகம் என்பவரது வீட்டில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை எம்.ஜி.ஆர், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் தந்தை மாரியின் வயிற்றில் குத்தியுள்ளார். 


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், மாரியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், சிகிச்சையிலிருந்த மாரியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் எம்.ஜி.ஆர். மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
 


சார்ந்த செய்திகள்