ADVERTISEMENT

காதல் திருமணம் செய்த வாலிபர் கூலிப்படை மூலம் கொலை : 3 மாத கர்ப்பிணி மனைவி கதறல்

12:32 PM Sep 15, 2018 | rajavel



காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

ADVERTISEMENT

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிர் யல்குடா என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் வாசலில் ஒரு கணவன் - மனைவி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒருவர், முன்னால் சென்ற ஆணை கம்பியால் தாக்குகிறார். அவர் எதிர்த்து போராடுகிறார். மீண்டும் அவரை தாக்கிவிட்டு அந்த வாலிபர் தப்பியோடுகிறார்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பத்தின் வீடியோ காட்சி அந்த மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தில்.

நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ருதா. இவரது தந்தை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என கூறப்படுகிறது. அம்ருதாவுக்கும், பினராய் என்பவருக்கும் காதல் மலருகிறது. காதலுக்கு அம்ருதாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பினராய் - அம்ருதா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணி மனைவி அம்ருதாவை மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பினராயின் தலையில் தாக்கியுள்ளார்.

தன்னை காத்துக் கொள்ள அந்த நபருடன் பினராயி சண்டையிட்டபோதும், பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார். தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்படுவதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

அப்போது அவர்களுடன் வந்த மற்றொரு பெண் அம்ருதாவை அடிப்பதற்கு துரத்தியுள்ளார். அப்பெண்ணிடம் இருந்து தப்பிப்பதற்காக அம்ருதா ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், அம்ருதா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தாழ்ந்த சாதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது. பிரனாயி பெற்றோர், அம்ருதாவின் தந்தை கூலிப்படை வைத்து தனது மகனை கொலை செய்துள்ளதாக புகார் கூறியுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT