/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_275.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழன்(25). இவர் பிரபல நிறுவனம் ஒன்றில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. காதலன் காதலி இருவரும், அவ்வப்போது அடிக்கடி வெளியூர் சென்று சுற்றி வந்துள்ளனர்.
அந்த காலகட்டத்தில் அந்த இளம் பெண்ணை மிரட்டி பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு முத்தமிழனின் நடவடிக்கை பிடிக்காததால், அந்த பெண் திடீரென அவருடனான பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இரண்டு வருடங்களாக ஒன்றாக சுற்றி திரிந்து, பேசி பழகிய காதலி திடீரென தன் காதலை முறித்து கொண்டதால் மனம் உடைந்த முத்தழகன் அந்தப் பெண்ணிடம் பேச பல முறை முயற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண் முத்தழகனை கண்டுகொள்ளவில்லை.
இதில் ஆத்திரத்தில் இருந்த முத்தழகன், இருவரும் காதலித்த காலத்தில் நெருங்கி பழகியபோது அவரை மிரட்டி தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண். காதலனை தேடி பிடித்து சண்டையிட்டுள்ளார். அப்போது முத்தழகன் அந்தப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனே அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்க, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)