Advertisment

காதலிக்க மறுத்த பெண்... கத்தியால் குத்திய இளைஞன்... சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்...!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு , கொலை பிரிவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், பெண்ணின் தாயார் மற்றும் சகோதரரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதற்கு தலா 7 ஆண்டுகள் சிறையும், கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.41 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

love issue - court judgement

நடந்தது என்ன..?

தங்கதுரை (32) அதேப்பகுதியை சேர்ந்த சுப்பிரிகா (24) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தான். தங்கதுரையின் காதலை சுப்பிரிகா ஏற்கவில்லை. அதனால் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி தங்கதுரை வீட்டிற்குள் நுழைந்து சுப்பிரிகாவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த்தினான். சுப்ரிகா சம்மதிக்கவில்லை. உடனே அவன் கத்தியால் குத்த, சுப்பிரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க சென்ற சுப்பிரிகாவின் தாயார் மற்றும் சகோதரரையும் கத்தியால் குத்தியதில், இருவரும் படுகாயமடைந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு தான் அவனை சாகும் வரை சிறையை விட்டு வெளியே வரவிடாமல் செய்திருக்கிறது.

Coimbatore judgement love
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe