கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திய காதலனை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Advertisment

காடம்புலியூர் அருகே உள்ள குட்டியாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் முத்தமிழ்(19) (பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் அவரது பாட்டி ராதா வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள ஹாட்சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். உளுந்தூர் பேட்டை அருகே உள்ள களமருதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜவிங்கம் மகன் சக்திவேல் (23). அதே கடையில் வேலை செய்து வந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னர் இது காதலாக மாறியுள்ளது.

Advertisment

love incident in chithamparam

இவர்கள் இருவரும் காதலிப்பது தெரிந்த ஹாட்சிப்ஸ் கடை உரிமையாளர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 2 பேரையும் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வடமூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் முத்தமிழ் இருந்தபோது அப்போது அங்கு சென்ற சக்திவேல் அவரிடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரெனமுத்தமிழைகத்தியால் நெஞ்சில் குத்தி, கழுத்தை அறுத்துவிட்டு சிதம்பரம் தாலுக்கா காவல்நிலையத்தில் சரனடைந்தார்.

love incident in chithamparam

இதில் முத்தமிழுக்கு கழுத்து மற்றும் நெஞ்சு பகுதி ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. தன லட்சுமியின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisment

love incident in chithamparam

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மருத்துவமனைக்கு சென்று முத்தமிழிடம்விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். சக்திவேல் வேறு ஜாதி என்று தெரிந்ததால் முத்தமிழ் காதலை மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் காதலியை கத்தியால் குத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.