Advertisment

"அன்புதான் அரசியலுக்கு முக்கியம்"- அண்ணாமலை பேச்சு! 

publive-image

தமிழ்நாட்டில் தேசியம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய ஜனநாயக கட்சியின் எழுச்சி விழா சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (15/07/2022) மாலை நடைபெற்றது. விழாவில் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் ரவிபச்சமுத்து எம்.பி., "இந்தியாவுக்கு பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டிற்கு இந்திய ஜனநாயக கட்சியும் தேவை" என்று பேசினார்.

Advertisment

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் தேசியம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அன்புதான் அரசியலுக்கு முக்கியம்; இந்திய ஜனநாயக கட்சி தேசியத்தை விட்டுக் கொடுக்காதக் கட்சி. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, முதலில் வரவேற்றவர் பாரிவேந்தர்" எனத் தெரிவித்துள்ளார்.

Annamalai Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe