love

விருத்தாசலத்தில் செக்குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கும், தமிழ்ப்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் குணசேகர் என்பவரின் மகள் சாருலதா. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் லூகாஸ். இவர்கள் இருவருக்கும் முகநூலில் Chating மூலம் நட்புணர்வு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்பு, சாருலதா செக் குடியரசுநாட்டிற்கு சென்று அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் நட்பு காதலாக மாறியது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இருவருடைய வீட்டாருக்கும் இவர்களுடைய காதல் தெரிய வந்துள்ளது. பின்பு இந்தியா வந்த லூகாஸ் சாருலதாவின் வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடத்தில் பேசியுள்ளார். மத நம்பிக்கையில்லாத மனிதராக இருந்த லூகாஸ் இந்துமதத்தின் பால் ஈர்க்கப்பட்டு, இந்து முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு திரு கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் செக்குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸுக்கும், தமிழ்ப்பெண் சாருலதாவுக்கும் இரு வீட்டார் முன்னிலையில் இந்து முறைப்படி மேளதாள, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. மனமகன் லூகாஸ் சாருலதாவின் கழுத்தில் தாலி கட்டி தன் துணைவியாக்கிக் கொண்டார்.

Advertisment

மணமக்களை உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த, மணமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.