suicide

Advertisment

தங்களது காதலை பெற்றோர்கள் எதிர்ப்பார்கள் என்று எண்ணி காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே மாதிநாயனப்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அசோக். அதே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் மாதேவி. ஒரே கிராமத்தில் வசித்து வந்த அசோக்கும், மாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலானது. அவர்கள் 2 பேரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

வெங்கடேஷ் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே போல மாதேவி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். செல்போனில் பேசிக்கொள்ளும் அவர்கள், ஊருக்கு வந்தால் சந்தித்து பேசுவார்கள். இது அவர்களது பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் மாதிநாயனப்பள்ளியில் தங்கள் வீட்டு முன்பு அசோக்கும், மாதேவியும் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். அவர்கள் 2 பேரையும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு காதல் ஜோடி 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அசோக்கும், மாதேவியும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்து 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அசோக்கும், மாதேவியும் தங்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுப்பார்கள் என எண்ணி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. கொஞ்சம் பொறுத்திருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருப்போம் என்று இருவரின் வீட்டாரும் கதறி அழுத சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகராஜகடை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.