தமிழகத்தில் சமீப காலமாக ஆணவ கொலை மற்றும் ஆணவ கொலை செய்வதாக மிரட்டலும் தலைதூக்கி வருகிறது. சமீபத்தில் கோவையில் அண்ணனே தம்பியை ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

 Love Couple run with Fear!

இந்தநிலையில் குமாி மாவட்டம் மண்டைக்காடு சோ்ந்த நந்தா(23) பிஎஸ்சி நா்சிங் முடித்து தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து வந்தாா். அதே மருத்துவமனையில் கண்டன்விளை ஓட்டுபுரையை சோ்ந்த அருண்(26) லேப் டெக்னீஷியனாக வேலை பாா்த்து வந்தாா். தினமும் இருவரும் சாதாரணமாக பாா்த்து பழகி வந்தவா்கள் நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்த விசயம் நந்தா வீட்டிற்கு தொியவர அவாின் பெற்றோா்கள் இதற்கு எதிா்ப்பு தொிவித்தனா். ஆனால் நந்தா காதலன் அருணை கைபிடிப்பதில் உறுதியாக இருந்தார். இந்தநிலையில் நந்தாவின் பெற்றோா்கள் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அவரின் முறைபையனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனா். இது நந்தாவுக்கு அதிா்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

Advertisment

இதனால் நந்தாவும் அருணும் பெற்றோருக்கு தொியாமல் திருமணம் செய்து கொண்டு நாகா்கோவில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறாா்கள். இந்தநிலையில் காதல் தம்பதிகள் விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி அமைப்பாளா் கோபி பேரறிவாளன் தலைமையில் மாவட்ட எஸ்பி யை சந்தித்து உயிா்வாழ பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனா்.

பின்னா் நம்மிடம் பேசிய நந்தா...நாங்க இருவரும் மேஜா் என்பதால் காதலித்து திருணம் செய்து கொண்டோம். அதன்பிறகு எனது உறவினா்கள் என்னையும் எனது கணவரையும் ஆணவ கொலை செய்வதாக தினமும் போனில் பேசி மிரட்டி வருகிறாா்கள். இதனால் நாங்கள் உயிருக்கு பயந்து வேலைக்கும் செல்ல முடியாமல் நண்பா்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் இருக்கிற இடத்தை கண்டு பிடித்து பின் தொடா்ந்து வருகிறாா்கள். இந்த மண்ணில் காதல் திருமணம் செய்து கொண்டு உயிா் வாழ முடியாதா? எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றாா்.