Petta

ரஜினியின் ‘பேட்ட’ படம் வெளியான திரையரங்குகளில் சில ஜோடிகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

Advertisment

ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஏழைத் தம்பதியான இவர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த பிறகு தம்பதிக்குச் சீர்வரிசை வழங்கியும் தியேட்டரின் வெளியில் உணவு வழங்கியும் அமர்க்களப்படுத்தியுள்ளனர். இதேபோன்று தஞ்சை சாந்தி திரையரங்கிலும் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.

Advertisment