Love Affair; There is excitement in Thirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமணத்திற்குப்பிறகும் பெண் தன்னுடைய காதலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரன், சகோதரியையும்அவருடைய காதலனையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). கட்டடங்களில் கம்பி கட்டும் வேலையைப் பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை என்பவருடைய மகள் மகாலட்சுமி என்பவரை சதீஷ்குமார் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

காதலுக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாலட்சுமிக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் ஆன ஒரே வாரத்திலேயே மகாலட்சுமிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டிற்கே வந்துவிட்டார். இந்த நிலையில், தாய் வீட்டிற்கு வந்த மகாலட்சுமி தன்னுடைய முன்னாள் காதலன் சதீஷ்குமாரோடு செல்போனில் பேசி வந்துள்ளார்.

இது மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருவரையும் கூப்பிட்டு கண்டித்த நிலையிலும் மீண்டும் அவர்களுடைய காதல் தொடர்ந்தால், ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் இரவில் நடந்து வந்து கொண்டிருந்த சதீஷின் கண்ணில் மிளகாய் பொடியைத்தூவி தலையை வெட்டித்துண்டித்துள்ளார். தலையை அந்த ஊரின் மையப் பகுதியில் உள்ள கலையரங்கநாடக மேடையின் மீது வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வீட்டிற்குச் சென்று சகோதரி மகாலட்சுமியின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்திருக்கிறார். தடுக்க வந்தவர்கள் கையையும் வெட்டியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மதுரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் சரகடிஎஸ்பி ஆகிய பலரும் விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் கொடூரக் கொலையை நிகழ்த்திய பிரவீன் குமாரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது பிரவீன் குமார் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.