Love affair: special force policeman passed away

Advertisment

திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு காவலராக பணியாற்றியவர் சுரேஷ் (31). இவர் கல்லக்குடி பகுதியில் உள்ள ஆசிரியையை காதலித்து வந்தார். அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் செய்வதை அறிந்தவர் பெரம்பலூரில் உள்ள பாண்டியன் லாட்ஜில் ரூம் எடுத்து எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷ், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று,பின்னர்திருச்சி கே.எம்.சியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காவலர் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாகபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.