Advertisment

வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? - போலீசார் தீவிர விசாரணை!

Is love affair the reason for the young man passes away ...

Advertisment

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சூரப்பநாயக்கர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (24). இவர் பள்ளப்பட்டி அருகே பூமதேவத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி (54) என்பவருடைய பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்குச் சென்ற ரமேஷ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி புளியம்பட்டி பயணியர் நிழற்குடை அருகே வாலிபர் ஒருவர் கழுத்துப்பகுதி மற்றும் வலது கையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் ரமேஷ் என்பது தெரியவந்தது. வழக்கம்போல் வேலை முடிந்து தனது வீட்டிற்கு ரமேஷ் டூவீலரில் சென்றுள்ளார். புளியம்பட்டி பயணியர் நிழற்குடை அருகே வந்தபோது ரமேஷை,வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். மர்ம நபர்கள் ரமேஷை எதற்காக வெட்டிக் கொன்றனர் என்பது தெரியவில்லை. ரமேஷின் செல்ஃபோனை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்து இருக்கலாம் எனவும் போலீசார் கூறுகின்றனர்.

incident karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe