ADVERTISEMENT

பாராளுமன்றதேர்தல் வருவதற்கு முன்பே சுவர்களில் தாமரை சின்னம்! போலீஸ்சில் சிபிஎம் புகார்!!

02:58 PM Dec 07, 2018 | sakthivel.m

பாராளுமன்ற தேர்தல் வருகிற 2019 நடக்க இருக்கிறது. இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் திண்டுக்கல் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இப்பொழுதே இடங்களை பிடித்து சின்னங்களையும் வரைந்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் காளியப்பன் உள்பட சிலர் அங்கங்கே மெகாசைஸ்சில் பெயர்களை எழுதியும் தாமரை சின்னத்தையும் வரைந்துள்ளனர் அதைக்கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அந்த புகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கூறியிருப்பதாவது...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாத நிலையில் பாஜகவினர் சட்டவிரோதமாகவும் மக்களை குழப்பும் வகையில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான தாமரைச் சின்னத்தை திண்டுக்கல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிட சுவர்களிலும், ரோட்டுபாலங்களிலும், வீட்டு சுவர்களிலும் அனுமதி பெறாமல் தாமரை சின்னங்களை வரைந்துள்ளனர்.

இதற்குக் காரணமான பிஜேபியின் மாநில செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலாளர் எச் ராஜா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஸ் லெனின் மற்றும் நிருபன்பாஸ் உள்ளிட்டோர் திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT