Advertisment

தொலைந்த செல்போன்! திருடுபோன பல ஆயிரம் ரூபாய்! 

Lost cell phone! Several thousand rupees stolen!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் டிரைவராக வேலை செய்து வருபவர் செஞ்சியைச் சேர்ந்த சையத் பிரீத்(21). இவர், செஞ்சி திண்டிவனம் சாலை அருகில் குடியிருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பணிக்கு செல்வதற்காக செஞ்சி கூட்ரோட்டில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவரது ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்று களவு போனது. பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்கவில்லை.

Advertisment

சையத் பிரீத், செஞ்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கிக் கணக்கில் மேற்படி காணாமல் போன செல்போன் எண்ணெய் இணைத்திருந்தார். இந்த நிலையில், தன் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரத்து 710 ரூபாய் பணத்தை ஒரே தவணையில் எடுத்து இருந்தது தெரியவந்தது. வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது அவரது காணாமல் போன செல்போன் எண்ணை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சையத் பிரீத், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன செல்போனை பயன்படுத்தி பணம் பறித்தது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

police Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe