ADVERTISEMENT

லாரி ஸ்ட்ரைக்... களையிழந்த ஈரோடு மாட்டுச் சந்தை, முடங்கிய விசைத்தறிகள்...

03:07 PM Jul 26, 2018 | kamalkumar


ADVERTISEMENT

பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், நாளுக்குநாள் உயர்த்தப்படும் டீசல் விலையால் லாரி தொழில் நசிவடைகிறது. கொள்ளையடிப்பது போல் சுங்க வரி வசூல் செய்யக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் கடந்த 19 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் பல வகையான தொழில்கள் முடங்கி விட்டது.

ADVERTISEMENT


ஈரோட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது வழக்கம். இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், தருமபுரி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா என வடமாநிலத்திலிருந்தும் மாட்டு வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும் விலைக்கு வாங்கிச் செல்வதும் உண்டு. சுமார் ஐந்து கோடி முதல் பத்து கோடிக்கு வியாபாரம் நடக்கும் ஆனால் லாரி ஸ்ட்ரைக்கால் விற்பனைக்கு மாடுகள் இல்லை, மாட்டு வியாபாரிகளும் வராததால் ஈரோடு மாட்டுச் சந்தை முற்றிலுமாக களை இழந்தது.


அதேபோல் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் 24ந் தேதி முதல் விசைத்தறிகள் இயக்குவதை நிறுத்தி விட்டனர். இதனால் நாளொன்றுக்கு சுமார் 100 கோடி ஜவுளி வர்த்தகம் முடங்கியுள்ளது. லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லா பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT