Advertisment

மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி;  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர் 

lorry overturned and met with an accident fifth curve of Bathalapalli hill pass

Advertisment

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி மலைப்பாதை ஐந்தாவது வளைவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இருந்து லாரி ஒன்று 25 டன் நெல் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு ஆந்திர மாநிலம் பேத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீசன் 45 என்பவர் ஒட்டி சென்று கொண்டு இருந்தார்.

இதனிடையே லாரி பேரணாம்பட்டு அடுத்த தமிழக ஆந்திர எல்லையான பத்தலப்பள்ளி அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை ஐந்தாவது வளைவில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாகக் காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார்.

Advertisment

மேலும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு செல்லும் வாகனங்களும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

accident driver lory
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe