Advertisment

திருச்சியில் லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து

Lorry overturned accident in Trichy

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் முட்டைகோஸ் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

ஓசூர் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பாசாமி. இவரது மகன் 23 வயதான தீனா. இவர் ஓசூரில் இருந்து அசோக் லைலாண்ட் லாரியில் முட்டைகோஸ் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கிளியநல்லூரில் உள்ள திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

accident lorry trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe