Advertisment

விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர்; காலையிலேயே அதிர்ச்சி

Lorry driver involved in accident; shock in the morning

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில் விபத்தில் சிக்கிக் கொண்ட லாரி ஓட்டுநரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

உளுந்தூர்பேட்டை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திடீரென லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரியலூரில் இருந்து மதுராந்திற்கு சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதில் லாரி ஓட்டுநர் இடிபாட்டிற்குள் சிக்கிக் கொண்டார்.

Advertisment

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இடிபாட்டிற்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடியும் தற்பொழுது வரை ஓட்டுநர் மீட்கப்படவில்லை. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்துநிற்கும் சூழல் ஏற்பட்டது.

ulundurpet accident lorry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe