Advertisment

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Lorry driver hits car driver; A crying wife

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும்லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும்அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

incident Pallavaram VIRAL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe