திட்டக்குடி வட்டம் (திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில்) உள்ள கழுதூர் நெடுஞ்சாலையில் இன்று (23-09-2018) காலை சுமார் 8.30 மணியளவில் வயல் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த கழுதூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி, ஜெயராணி, தனம் இந்த மூன்றுபெண்களின்மீது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி (TN 28 AJ 2018 ) எதிர்பாராதவிதமாக மோதி விபத்தானது.
இதில் இந்திராணி -45 என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த இரண்டு நபர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தினை வேப்பூர் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.