lorry crash in Coimbatore

Advertisment

கோவையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் க.க.சாவடியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது ஆம்னி கார் ஒன்று மோதியது. இதில் காரில் இருந்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.