Lorry bike accident two passed away

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர், துவாக்குடி பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். நேற்று மாலை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 17 வயது இளைஞருடன் தஞ்சையில் இருந்து செங்கிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நவலூர் பிரிவு சாலை அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது இவர்கள் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கிப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment