lorry and women incident police investigation

லாரி மோதியதில் பெண் ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம், நுள்ளிவிளை அருகே உள்ள பரசேரி பகுதியைச் சேர்ந்த பத்மதாஸ் என்பவரின் மனைவி தர்ஷினி தனது இருசக்கர வாகனத்தில் திங்கள் சந்தையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். நுள்ளிவிளை அருகே சென்றபோது, ரேஷன் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி தர்ஷினி வாகனத்தில் பலமாக மோதியது.

Advertisment

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த தர்ஷினி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது. பின் சக்கரத்தில் சிக்கிய அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த இரணியல் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.