Advertisment

லாரியும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து! - 30 பேர் படுகாயம்

A lorry and a government bus collide head-on in an accident! 30 people were injured

Advertisment

கல்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் தனியார்லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று மோதியது. செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள நத்தம் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தினால் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பேருந்து ஓட்டுநரான கார்த்திகேயன் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாரியினை ஓட்டி வந்த டிரைவருக்கும் காலில் எலும்பு முறிவும் தலையில் பலத்த அடியும் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்ததும் தகவல் அறிந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் தீயணைப்பு படையினருடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 30 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்பாக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe