ஈரோட்டை அடுத்த சத்தியமங்கலத்தில்காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்குசெல்ல இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவர் மீது அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவையிலிருந்து அட்டை பாரம் ஏற்றிக்கொண்டு பவானி சாகர் காகித ஆலைக்குசென்ற லாரி வரும் வழியில் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் பஸ் நிறுத்தத்தின் திருப்பத்தில்இருசக்கர வாகனத்தில்நின்று கொண்டிருந்த பழனிசாமி என்பவர் மீது அதிவேகத்தில் சென்று கவிழ்ந்தது.இதைக்கண்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகபழனிசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆகினும் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் மீது சரக்கு லாரி பாரம் தாங்காமல் சாலைவளைவில் தடுமாறி கவிழ்ந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us