Advertisment

லாரி கயிற்றில் மாட்டிய வாலிபர்.. தரதரவென இழுத்துச் சென்ற லாரி...

Lorry accident in chidambaram

சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் கயிறு அவிழ்ந்து சாலையோரம் நடந்து சென்றவரின் உடலை இறுக்கி தரதரவென இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலியான சம்பவம் சிதம்பரத்தில் நடந்துள்ளது.

Advertisment

சிதம்பரம் அருகே புலாமேடு கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து கயிறு அவிழ்ந்து சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவரின் உடலில் சுற்றி அவரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் சம்பவ இடத்திலேயே அவர்பலியானார்.

Advertisment

இதனை அறியாத லாரி டிரைவர், லாரியை ஓட்டிய வண்ணமே இருந்தார். இதனை பார்த்தஒருவர் இரு சக்கர வாகனத்தில் துரத்திச்சென்றுலாரி ஓட்டுநருக்குத்தகவல் கூறியதன் பேரில் அவருக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த அந்த லாரி ஓட்டுநர் பிரபுவை சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Chidambaram lorry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe