Advertisment

குழந்தையை மோதி பலியாக்கிவிட்டு நிற்காத லாரி; ஒற்றை ஆளாக லாரியை நிறுத்த முயன்ற தாய்...நெகிழவைத்த சிசிடிவி காட்சி

mother

சென்னை வில்லிவாக்கதத்தில் ஒன்றரை வயது குழந்தையை மோதிவிட்டுநிற்காமல் சென்றமெட்ரோ லாரியை நிறுத்த உயிரிழந்த குழந்தையை தோளில் தூக்கியபடிகுழந்தையின் தாய் ஒரேஆளாக லாரியின் பின்புறம்பிடித்தபடி ஓடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

mother

mother

சென்னை வில்லிவாக்கத்தில் ஜெகன்நாதன் நகரின் வழியாக சென்ற மெட்ரோ லாரி மோஹித் என்ற ஒன்றரை வயது குழந்தை மீதுமோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதை பார்த்த தாய் அடிப்பட்ட குழந்தையை தோளில் தூக்கியபடி ஒரே ஆளாக நிற்காமல் சென்ற லாரியின் பின்புறமுள்ளபம்ப்பரை பிடித்தபடி கூச்சலிட்டபடிபின்னாடியேஓடியுள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

mother

அதன்பின் அப்பகுதி மக்கள் அந்த லாரியை பிடித்து அந்த லாரியை இயக்கியலாரி ஓட்டுனரை போலீசில் ஒப்படைத்தனர்.அப்போது அந்த லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருத்ததாலும், அந்த குறுகிய தெரு சாலையினுள் லாரி வந்ததாலும் இந்த விபத்து நடந்ததாக மக்கள் குற்றம்சாட்டினர்.ஆனால் அந்த விபத்தில் சிக்கிய குழந்தை மோஹித் உயிரிழந்தது.

accident humanity lorry love Mother's Day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe