/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20180914_102057.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள அரசகுழி என்ற கிராமத்தில் இன்று அதிகாலை நாமக்கல்லில் இருந்து கோழி ஏற்றி வந்த லாரியும், நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் நிலக்கரி லாரியை ஓட்டிச்சென்ற அரியலூர் மாவட்டம் கீழப்பழுரை சேர்ந்த தங்கவேல் மகன் மகாலிங்கம் (வயது 47), மற்றும் குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் நகர் மீனாட்சி பேட்டை கோதண்டபாணி மகன் பழனிவேல் (40), அதே கிராமத்தை பச்சையப்பன் மகன் பாபு (24) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20180914_102139.jpg)
உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. மேலும் பலத்த காயமடைந்த கோழி ஏற்றி சென்ற லாரி ஓட்டுனர் அபினந்தபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் பிரதிவராஜ் (25), கதிர்வேல் மகன் சரத்குமார் (20) இருவரும் உயிருக்கு போராடிய நிலையில், விழப்புரம் முன்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊ.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)