Looting a sweet shop with a knife; netting a mysterious person

நெல்லையில் இனிப்பு கடையை பட்டாக்கத்தியால் சூறையாடிய மர்ம நபரைபோலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

Advertisment

நெல்லை டவுன் பகுதியில் தங்கராஜ் என்பவர் இனிப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடுவதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூன்றடி நீளம் கொண்ட பட்டாக்கத்தியால் ஸ்வீட் கடையில்வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை அடித்து நொறுக்கினார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. காட்சிகளின் அடிப்படையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

கடைக்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியதில், கடையை அடித்து நொறுக்கியது மாதவன் என்பது தெரியவந்தது. ஏற்கனவே மாதவன் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மாதவன் கஞ்சா விற்பது தொடர்பாக தங்கராஜ் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து கடையைஅடித்து நொறுக்கியது தெரியவந்தது.