Advertisment

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகீர்மானக் கழகம் சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வளைய சுற்றுத்தர அமைப்பு திறப்பு விழா இன்று சென்னையில் நடந்தது. இதனை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், நக்கீரன் ஆசிரியர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.