''கமலையும் என்னையும் பாருங்க எப்பொழுதும் இளமையாதான் இருப்போம்'' - பிரச்சாரத்தில் சரத்குமார் குஷி!  

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும்முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல்பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களைஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோவையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்மருத்துவர் மகேந்திரனைஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசிய சரத்குமார், ''சரத்குமார் முன்ன தாடி இல்லாமல் இருந்தார். சிரிச்சா குழி விழும் பாப்போம்னு நெனச்சிங்க. இது ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக வைத்துள்ள தாடி. தாடி வைத்தவர்கள் எல்லாம் பிரைம் மினிஸ்டர் ஆகிட்டாங்க. ஒருவேளை கமல் முதல்வராகிவிட்டால், என்னை பிரதமராக்கச் சொன்னாலும் சொல்லுவார். உங்களுக்கு மட்டும் 66 வயசுலஎப்படி கருப்பு தாடின்னுகேட்கலாம். உங்களுடைய சிரிக்கும் இன்முகத்தைப் பார்க்கும்போது இளமை தானாகவே வந்துவிடுகிறது. கமலையும் என்னையும் பாருங்க இளமையாத்தான்இருப்போம். எங்களுக்கு இளமைதான் வாழ்க்கை'' என்றார்.

sarathkumar start election campaign
இதையும் படியுங்கள்
Subscribe