Advertisment

“தமிழினம் உள்ள வரை கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்” - ஐ.பி.செந்தில்குமார் 

As long as Tamil nation exists, fate kalaignar will endure says I.P. Senthil Kumar

Advertisment

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு. க. சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் கலைஞரின் திருவுருவ படம் வைக்கப்பட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ஜெயன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்க்கிரேட் மேரி, பொருளாளர் .சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்ட பாணி, ஆத்தூர் நடராஜன், மாநகர செயலாளரும், துணை மேயரு மான ராஜப்பா, திண்டுக்கல் மேயர் இளமதிஜோதிபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, சிவகு ருசாமி, பிள்ளையார்நத்தம் முருகேசன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

As long as Tamil nation exists, fate kalaignar will endure says I.P. Senthil Kumar

இந்த விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பேசுகையில், “தமிழினம் உள்ள வரைக்கும் தமிழின தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளின் வெற்றிக் கனியை தலைவர் கரங்களில் வழங்க சபதம் எடுப்போம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார்.

Advertisment

அதன்பின் பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். முன்னதாக மகளிர் அணியினர், மாவட்ட கழக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மாவட்ட கட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய முத்தமிழ் அறிஞர் வாழ்க... உள்ளாட்சிகளில் 50சதவீதம் இட ஒதுக்கீடு தந்த கலைஞரின் புகழ் ஓங்குக... வள்ளுவனுக்கு வான் உயர சிலை தந்த முத்தமிழ் அறிஞர் செம்மொழி நாயகர் கலைஞர் வாழ்க... என மகளிர் அணியினர் கோசமிட்டவாறு ஊர் வலமாக வந்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ராபர்ட், பகுதி செயலாளர்கள் ராஜேந்திர குமார், ஆனந்த், பஜீருல்ஹக், சேகர், மாநகர பொருளாளர் சரவணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், கலைராஜன், ரூபன் டென்சிங்ராஜா, அகரம் பேரூராட்சிமன்ற தலைவர் மணி (எ) நந்தகோபால், மாவட்ட வர்த்த கர் அணி அமைப்பாளர் பொன்முருகன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் ஜான் பீட்டர், நெல்லை சுபாஷ், ஆனந்த், இந்திராணி, ஆரோக்கியமேரி, ஜெயந்தி கென்னடி, அருள்வாணி, சேகர், பானுப்ரியா ஜெயராமன் உன் படக் கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

kalaignar I.P.SENTHILKUMAR Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe