தனிமை மற்றும் பண்டிகை காலங்களை குறிவைத்து களமிறங்கியுள்ளனர் வழிப்பறித் திருடர்கள். மோட்டார் சைக்கிளில் போகும் போதே சங்கிலியை பறித்துக் கொண்டு போகிறார்கள். அதேபோல ஒதுக்குப் புறமான வீடுகளையும் நோட்டம் விட்டு ஆள் இருக்கும் போதே உள்ளே நுழைந்து திருடிச் செல்கிறார்கள். மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. உதாரணத்திற்கு சில சம்பவங்களை பார்க்கலாம்.

Advertisment

Lonely, festival-goers thieves ... need caution!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள காசிம் புதுப்பேட்டையில் கடந்த 15 நாட்களுக்குள் ஒதுக்குப் புறமாக இருந்த வீடுகளில் ஆட்கள் தூங்கும் போதே கதவு தாழ்பாள்களை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து நகை, பணம் திருடிச் சென்றனர். படுக்கை அறையில் படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

Advertisment

நேற்று மாலை புதுக்கோட்டை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் சங்கிலியை இழுக்க சங்கிலி கனமாக இருந்ததால் அறுகவில்லை சத்தம் போட்டதால் தப்பி ஓடிவிட்டனர்.

Lonely, festival-goers thieves ... need caution!

நேற்று மாலை அறந்தாங்கி அருகில் உள்ள வல்லவாரி கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையில் டீ, பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணிடம் ஆள் இல்லாத நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதுபோல சென்ற 3 இளைஞர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு வெளியே வந்து தயாராக நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்கும் போது பறிகொடுத்த பெண் சத்தம்போட கிராமத்து மக்கள் அவர்களை பிடிக்கவயல்வெளியில் ஓடினார்கள். அதில் ஒருவனை பிடித்து கிராம மக்களே கவனித்து விசாரிக்க, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்களும் காலையிலிருந்து கடையின் எதிரில் உள்ள நிழற்குடையில் இருந்து கொண்டு கவனித்துள்ளதும் ஆள் இல்லாத நேரத்தில் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியதாகவும் கூறியுள்ளான்.

Advertisment

Lonely, festival-goers thieves ... need caution!

இப்படி பண்டிகை நேரம் நெருங்கும் நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நகைகளை போட்டுக் கொண்டு தனிமையில் செல்லும் போதும் தனிமை வீடுகளில் இருப்பதையும் கண்காணிக்கும் திருடர்கள் வழிப்பறிக்கு இறங்குகிறார்கள். அதனால் குழந்தைகள் கழுத்தில் நகைகளை போட்டு விளையாட அனுப்புவதும் பெண்கள் நகைகளுடன் தனியாக செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பதுடன் தனிமை வீடுகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பதும் நல்லது.