Advertisment

காதல் போர்வையில் பல பெண்களுடன் தனிமை! புதுமாப்பிள்ளையை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற உறவினர்கள்! 

Loneliness with many women in the guise of love! Relatives who took the person to the police station!

கும்பகோணம், துக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் எனும் இளைஞன், பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி தனிமையில் இருந்துவந்துள்ளார். அப்படி கடைசியாக ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் பல முறையில் தனிமையில் இருந்துவிட்டு, இறுதியில் அப்பெண் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது ஏமாற்றியுள்ளார்.

Advertisment

கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியைச் சேர்ந்த இளம்பெண் கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் இறந்துவிட்டார், தந்தையோ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அந்த பெண்ணை தனியாக விட்டுவிட்டு சென்று விட்டார். கவி, தாய் இல்லாமலும், தந்தை இருந்தும் இல்லாமலும் மனவேதனையோடு அத்தை, மாமாவின் பாதுகாப்போடு கும்பகோணத்தில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை பார்த்துக்கொண்டு, அதில் கிடைக்கும் வருமாணத்தில் ஜீவனம் செய்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில் கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்கிற இளைஞன் கவி வேலைபார்க்கும் இடத்திற்கு வேலை விஷயமாக அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி நான்கு ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதற்கிடையில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

இந்தசூழலில் ஒரு வருடத்திற்கு முன்பு தியாகராஜன், தனக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று வேலை நிரந்தரமானவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும், கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால், நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை என அடிக்கடி கும்பகோணத்திற்கு வந்து கவியுடன் தனிமையில் இருந்துவிட்டு சென்றிருக்கிறார்.

இந்தநிலையில் சிலநாட்களுக்கு முன்பு கவியைச் சந்திக்க வந்த தியாகராஜனின் செல்போனை எதேர்ச்சையாக பார்த்த கவிக்கு பேரதிர்ச்சி ஏற்படுள்ளது. காரணம், தியாகராஜன் பல பெண்களுடன் தனிமையில் இருப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும், ஆபாச வாட்ஸ்அப் எஸ்.எம்.எஸ்.களும் அவரது செல்போனில் இருந்திருக்கிறது.

இதுகுறித்து கவி, தியாகராஜனிடம் கேட்க, பதில் கூறாமல் சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த சம்பவத்திற்கு பின் கவியைச் சந்திப்பதை தியாகராஜன் தவிர்த்திருக்கிறார். ஆனாலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவி, தியாகராஜனைச் சந்தித்து தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் கோபமான தியாகராஜன் "உன்னமாதிரி எத்தனையோ பெண்களோடு சுகமா வாழ்ந்திருக்கேன், அத்தனைபேரையுமா திருமணம் செய்துக்க முடியும்” என கூறியதோடு, "உன்னுடன் சேர்ந்து இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டா உன் நிலமை என்னாகும்னு யோசித்து முடிவெடு" என கவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கவியும் செய்வதறியாமல், தனக்கு நடந்ததை அவரின் அத்தை, மாமா உள்ளிட்டவர்களிடமும் சொல்லாமல், தியாகராஜனிடமும் பேசாமலும் இருந்துவந்திருக்கிறார். ஆனாலும், சிலநாட்கள் கழித்து கவி வீட்டிற்கு வந்த தியாகராஜன், வீட்டில் யாரும் இல்லாததை யூகித்து கவியை சமாதானம் செய்வது போல் அவரிடம் பேசியும், தனிமையில் இருக்கவும் முயன்றுள்ளார். ஆனால், கவி அதற்கு இணங்காமல் விடாப்பிடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கெஞ்சி அழுது புலம்பியுள்ளார்.

அந்தசமயத்தில் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த கவியின் அத்தை, இதனை பார்த்து கவியிடம் கேட்டிருக்கிறார். அதன்பிறகே நடந்தது அனைத்தையும் கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற தியாகராஜனை அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி விரட்டிப்பிடித்து தர்மஅடி கொடுத்ததோடு. அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு இழுத்துச்சென்று பட்டு வேட்டி வாங்கிவரச்செய்து சட்டை மாற்றிவிட்டு கவிக்கு மாலை மாற்றி தாலி கட்ட வைத்துள்ளனர்.

அதன்பின்னர் இருவரையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணின் உறவினர்கள், இது குறித்து புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில் போலீசார் தியாகராஜனை விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலிசாரிடம் நாம் கேட்டோம். அதற்கு அவர்கள், "பல பெண்களோடு இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. தனிமையில் இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டியே அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளார். தற்போது ஒரு பெண்ணின் உறவினர்களிடம் வசமாக மாட்டிவிட்டார். திருமணம் வரை சென்றுவிட்டது, இனிமேல் அவர் செல்போனில் இருக்கும் பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றவும், கவியின் வாழ்க்கையை நினைத்தும் அவரிடம் விசாரித்து, அவரிடமிருந்த புகைப்படங்கள் அனைத்தையும் அழித்துள்ளோம்" என்கிறார்கள்.

police Kumbakonam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe