Advertisment

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்

hjk

குடியரசு தினமான நேற்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி வங்கியின் மண்டல இயக்குநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தின விழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். திமுகவை சேர்ந்த கனிமொழி, நடிகர் கமல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

police RBI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe