
திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்துவருபவர் யோகேஸ்வரன் (27). கடந்த 7ஆம் தேதி திருநெல்வேலிக்கு திருமணத்திற்காக சென்றவர், மீண்டும் இன்று (11.09.2021) காலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 8 சவரன் தங்க நகை, ரூபாய் 40,000/- பணம், பூஜை ரூம் மேல் வைத்திருந்த மூன்று சூட்கேஸ் வெள்ளி பொருட்கள் மற்றும் முதல் மாடியில் பெட்ரூம் பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் ஆகியன திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow Us