ADVERTISEMENT

காவல் ஆய்வாளரிடம் ஏகவசனம் பேசிய ரயில்வே ஊழியர் கைது!

11:13 PM Apr 27, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவு பிறப்பித்து 33 நாளாக அமலில் உள்ள நிலையில் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பலரும் வெளியே சுற்றுகின்றனர்.

ADVERTISEMENT


கரோனா பரவலில் அபாயகரமான மாவட்டமாக உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாலுகா, குடிமல்லூர் கிராமம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவற்றின் மகன் குமரவேல். அரக்கோணம் ரயில்வே மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு பணிமனையில் பணியாற்றுகிறார்.

இவர் கடந்த ஏப்ரல் 25 ந்தேதி 144 உத்தரவை கடைபிடிக்காமல் அடிக்கடி பொறுப்பற்ற முறையில் நகர் வலம் வந்ததை தொடர்ந்து அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மடக்கி எச்சரித்துள்ளனர்.

அதற்கு அவர் நான் அப்படிதான் வெளியில் சுற்றுவேன், அதை கேட்பதற்கு நீங்கள் யார் என கூறியதோடு மிரட்டலும் விடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து, 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டது, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது என 269, 270, 294(b),353, 506(i) IPC r/w 188 IPC உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த வாலாஜாபேட்டை நகர போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT