Advertisment

முழு ஊரடங்கு எதிரொலி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்! திடீர் ஆய்வு செய்த பெண் சப்-கலெக்டர்!

ss

கரோனா வைரஸ் எதிரொலி மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஞாயிற்று க்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது.

Advertisment

ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலான மக்கள் மட்டன், சிக்கன், மீன் போன்ற இறச்சிகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில்தான் அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவித்துள்ளதால் முதல் நாளான சனிக்கிழமையே மக்கள் இறைச்சிக் கடைகளுக்கு சென்று மட்டன், சிக்கன், மீன் வாங்கி வைத்து கொண்டு மறுநாள் சமைத்து சாப்பிடுவதை நடை முறையாக கடைபிடித்து வருகிறார்கள்.

Advertisment

அது போல் தான் திண்டுக்கல் மாநகராட்சி மூலம் மீன் மார்க்கெட் சோலையகால் தியேட்டர் எதிரே செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் வாங்கிச் சென்று தெருக்களிலும் ரோடு ஓரங்களிலும் மீன்களை விற்று வருவது வழக்கம். இப்படி வாங்க க்கூடிய மீன் வியாபாரிகளுக்கு ஐந்து கிலோ முதல் முப்பது கிலோ வரை கடைக் காரர்களும் மீன்களை விற்பனை செய்வார்கள்.

ssss

ஆனால் ஞாயிற்று க்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் வியாபாரிகளும் சரிவர வரவில்லை. ஆனால் பொதுமக்கள் பெருந்திரளாகவே மீன் மார்க்கெட்டுக்கு படையெடுத்து வந்தனர். அதைக் கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த மக்களை நீண்ட வரிசை யில் நிற்க வைத்து பத்து பத்து பேராக மார்க்கெட்டுக்குள் அனுமதித்தனர். பொதுமக்களுக்கும் ஒரு கிலோ முதல் பத்து கிலோ வரை குறைந்த விலைக்கு மீன் மார்க்கெட் கடைக்காரர்களும் விற்பனை செய்த தால் பொது மக்களும் போட்டி போட்டு கொண்டு மீன் மார்க் கெட்டுக்கு வந்து சமூக இடை வெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்தும் மீன்களைவாங்கி சென்றனர்

இந்த விஷயம் பயிற்சி் பெண் சப்- கலெக்டர் ஆயிசிங்குக்கு தெரியவே உடனேமாநகராட்சி மீன் மார்க்கெட்டுக்குள் அதிரடி ஆய்வு செய்ய வந்தவரை மீன் மார்க்கெட் தலைவர் கே.எம். தனசேகரன். சந்திரன்.தனராஜ் உள்பட மீன் மார்க்கெட் சங்க நிர்வாகிகளும் போலீஸ் அதிகாரிகளும் வர வேற்றனர் அதன் பின் சப்-கலெக்டரும் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தார்அதோடு முக கவசம் அணியாத மக்கள் சிலருக்கு முககவசம் அணி யசொல்லி வலியுறு த்தினார்

அதுபோல் மீன் மார்க் கெட்டுக்கு வெளியே கடைகள் போட்டு இருந்த சில்லரை மீன் வியாரி களிடமும் முககவசம் அணிசொல்லி அறிவுரை வழங்கியதுடன் மட்டு மல்லாமல் முககவசம் அணியாத சில சில்லறை வியாபாரிகளுக்கு அபதாரமும் ஸ்பாட்டிலை விதித்தார் அதைக்கண்டு மற்ற சில்லறை மீன் வியாபாரிகளும் பொது மக்களும் உஷார் ஆனார்கள் இப்படி திடீ ரென வெளி மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் சப் கலெக்டர் அதிரடியாக மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தது மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

fish market inspection lockdown sub collector
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe