Skip to main content

பாமக ஆர்ப்பாட்டத்தில் கவனத்தை ஈர்த்த பூட்டு!

Published on 04/09/2022 | Edited on 05/09/2022

 

 LOCK who attracted attention in the Struggle

 

நெய்வேலி என்எல்சியை கண்டித்து பாமக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைவாய்ப்பில் தமிழர்களையும் தமிழக மக்களையும் தொடர்ந்து புறக்கணிக்கும் நெய்வேலி என்எல்சியை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. இக்கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் பெரிய அளவிலான பூட்டு ஒன்று செய்யப்பட்டு வைக்கப்பட்டது. அந்த பூட்டை மக்களுக்கு காண்பித்த அன்புமணி ராமதாஸ் ''இந்த பூட்டு ஒரு அடையாள பூட்டு. எங்கள் மண்ணையும், எங்களது மக்களையும் நிம்மதியாக விடுங்க. ஒரு பிடி மண்ணை கூட நாங்கள் எடுக்க விட மாட்டோம். அதையும் மீறி ஏதாவது செய்தீர்கள் என்றால் இதுபோன்ற அடையாள பூட்டு கிடையாது உண்மையான பூட்டை எடுத்துக் கொண்டு சுற்றி இருக்கிற எல்லா கேட்டையும் பூட்டி விடுவோம். யாரும் வெளியே போக முடியாது உள்ளே வரவும் முடியாது'' என்றார்.

 

 LOCK who attracted attention in the Struggle

 

ஆர்ப்பாட்டத்தில் காட்டப்பட்ட அந்த பெரிய அளவிலான பூட்டு மாதிரி என்பது அனைவரையும் கவர்ந்திருந்தது. அந்த பூட்டினை செய்தவர் சிற்பி சிவா. இவர் ஏற்கனவே பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்தவர் என்பதும், காடுவெட்டி குருவின் சிலை அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதாக பாமக நிறுவனர் ராமதாஸிடம் பாராட்டு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய அன்புமணி ராமதாஸ்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மாவட்டச் செயலாளர் ஜி.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

'பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டது'- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

mm

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயல் பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புயல் அறிவிப்பு முன்பே வெளியாகியும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதிலிருந்து அரசு தவறிவிட்டது. கடந்த காலங்களில் இதைவிட மழை பெய்தாலும் அரசு திட்டமிட்டு இருந்தால் பாதிப்பை  குறைத்திருக்கலாம். மழைநீர் வடிகால் பணிகளுக்கு 4,000 கோடி செலவிட்டும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். மூன்று நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில், குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.