சென்னை தி.நகரில் இருந்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டு திறக்கப்பட்டது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால். இவருக்கு எதிரான அணியினர் நேற்று தி.நகரில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டது.
தியாகராயர் நகரில் உள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று காலை வரும் விஷால் பூட்டை திறந்து அலுவலகதிற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனை வரும் என்று போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.
அதன்படி வந்த நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயன்றார். அப்போது பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அவர்களுடன் விஷால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் பத்திர பதிவு துறையினர் பூட்டை அகற்ற வருகின்றனர். நீங்கள் அவர்களிடம் பேசி கொள்ளுங்கள். இப்போது சம்பவ இடத்தை விட்டு நகருங்கள் என எச்சரித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
விஷால் மற்றும் அவருடன் வந்தவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை தேவர் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டு திறக்கப்பட்டது.