Advertisment

மதுரை ஆதீனம் அறைக்கு 'சீல்'! - நித்யானந்தா காரணமா?

Lock and seal the room used by Madurai Aadeenam ..!

மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், சுவாசக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முதல் அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தில் அவர் பயன்படுத்திய அறையை, வேறு யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள நிலையில், அதற்குதருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நேற்றிரவு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

Lock and seal the room used by Madurai Aadeenam ..!

நித்தியானந்தா தன்னை 293வது ஆதீனமாகக் குறிப்பிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போதைய ஆதீனத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe