
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது 'கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து கடையடைப்பு நடத்தியுள்ளார்கள். இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ''திருமங்கலத்தினுடைய சுங்கச்சாவடி கடந்த பத்தாண்டுக் காலம் எப்படி இருந்தது. அது மாதிரியே இனி வரக்கூடிய காலங்களிலும் இருக்க வேண்டும். பொதுவாக லோக்கலில் இருக்கக்கூடிய வாகனங்கள் எல்லாம் 10 வருடமாகக் கட்டணமின்றி போய் வந்தார்கள். அது மாதிரி தான் எல்லா வண்டியும் போய் வரவேண்டும். இதில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர், நாங்கள், சுங்கச்சாவடி காண்ட்ராக்ட் ரெப்ரசன்டேடிவ், மேற்பார்வையாளர்கள் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். லோக்கலை பொறுத்த அளவிற்கு 10 வருடம் எப்படி வந்துகொண்டு இருந்தார்களோ அப்படியே அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்'' என்றார்.