Advertisment

கலைகட்டும் தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் காலை மற்றும் இரவில் வலம் வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் கண்டு வருகின்றனர்.

Advertisment

student

இந்நிலையில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி பெரியத்தேர் என்கிற மகாரதம் வீதியுலா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த தீபத்திருவிழா அன்று கிரிவலம் வரவும், மலையேறி அண்ணாமலையார் பாதத்தை காணவும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் 10ஆம் தேதி செவ்வாய்கிழமை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

holiday thiruvannaamalai
இதையும் படியுங்கள்
Subscribe