Local holiday notification for Chennai district tomorrow

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து சென்னை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாளை (29.08.2023) செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி (02.09.2023) சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

Advertisment

இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான நாளை (29.08.2023) அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அறிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.